புதுகை வெள்ளாற்றில் தைப்பூச தீர்த்தவாரி

புதுக்கோட்டை வெள்ளாற்றில் தைப்பூச விழாவையொட்டி தீர்த்தவாரி உற்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வெள்ளாற்றில் தைப்பூச விழாவையொட்டி தீர்த்தவாரி உற்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
தைமாதம் பூச நட்சத்திரத்தில் சிவனும், பார்வதியும் நதியில் நீராடியதை போற்றும்வகையில், புதுக்கோட்டையில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு திருவேங்கைவாசல் பெரியநாயகி உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள உற்ஸவ மூர்த்தி சப்பரத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார்.  
இதேபோல புதுக்கோட்டை பிரகாதம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர், வேதநாயகி உடனுறை சாந்தநாதர், கோட்டூர் மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் மற்றும் விராச்சிலை சவுந்தரநாயகி உடனுறை வில்வவனேஸ்வரர் ஆகிய உற்ஸவ மூர்த்திகளும் கொண்டுவரப்பட்டனர். 
வழியில் பல்வேறு இடங்களில் சுவாமி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து ஆற்றங்கரையில் உற்ஸவ மூர்த்திகள் வைக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து பூசத்துறை ஆற்றில் பக்தர்கள் தீர்த்தமாடினர்.
இதேபோல் குமரமலை முருகன் கோயில், மலையக்கோயில் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com