"தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்'

தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எ.லாசர்.

தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எ.லாசர்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொங்கல் பண்டிகையின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்கள் உட்பட தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தலித் இளைஞர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கௌரவக் கொலைகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்படுவோருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை தமிழக அரசு அளிக்காதது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு  விவசாயிகளுக்கு போதுமான அளவிற்கு  நிவாரணம் வழங்கவில்லை. அதிலும், விவசாயத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு எதையுமே செய்யவில்லை. 
 நிகழாண்டிலும் தமிழகம் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிப்பதோடு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.   தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் முறையாக வேலையும், சம்பளமும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி மார்ச் மாதம் அனைத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
 கட்டப்பஞ்சாயத்து மற்றும் உயர் சாதியினரால் சாதாரண மக்கள் மிகவும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக கடந்த 2012-இல் மக்களவையில் காங்கிரஸ் அரசு  தாக்கல் செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
மறைந்த ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால்தான் அவரது படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைத்ததை எதிர்க்கிறோம். அவரது படம் வைத்துள்ளதன் மூலம் சட்டப்பேரவைக்கென இருந்த மாண்பு கெட்டுவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com