"நீர் மேலாண்மை மூலமே விவசாயத்தைக் காக்க முடியும்'

தமிழகத்தில் நீர் மேலாண்மையை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே விவசாயத்தைக் காக்க முடியும் என்றார் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும்  டாக்டர் ராஜேந்திர சிங்.

தமிழகத்தில் நீர் மேலாண்மையை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே விவசாயத்தைக் காக்க முடியும் என்றார் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும்  டாக்டர் ராஜேந்திர சிங்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், ஆறுகள் வள மீட்பு இணைப்புக் கருத்தரங்கம் ஜி.எஸ். தனபதி தலைமையில் புதன்கிழமை  நடைபெற்றது. 
கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
இயற்கை வளங்களை நாம் நேசிக்க வேண்டும். கடந்த காலங்களில் நாம் இயற்கையை நேசித்து வாழ்ந்தோம். ஆனால் தற்போது இயற்கை வளங்களை நாம் அழிப்பதால்தான் தண்ணீர் பிரச்னையும் விவசாயிகளின் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது. நாம் தண்ணீரை சேமிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  
மழைக்கு ஏற்ப விவசாயிகள் தங்களது விவசாயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நீர்  மேலாண்மையை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே விவசாயத்தைக் காப்பாற்ற முடியும். ஆறுகள், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி,  தண்ணீரைத் தேக்கி , நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும்.
தற்போது, விவசாயிகள் நீர் பிரச்னை , விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.  
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண்பதோடு, விளைபொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும். காவிரி பிரச்னையை இரு மாநில கட்சியினர் அரசியலாக்கி விட்டதால், இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. 
அரசியல் கட்சிகளைத் தவிர்த்து இருமாநில விவசாயிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றார்.
கருத்தரங்கில், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஆதப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com