உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு கட்டுரைப்போட்டி

உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு, அறந்தாங்கி கிளை நூலகம் உள்ளிட்ட பல்வேறு நூலகங்களில் கட்டுரைப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு, அறந்தாங்கி கிளை நூலகம் உள்ளிட்ட பல்வேறு நூலகங்களில் கட்டுரைப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலகத் துறையில் மாணவ, மாணவிகளுக்கு இடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், நூலக உறுப்பினர்களாக மாணவ, மாணவிகளைச் சேர்க்கும் பொருட்டு கிளை மற்றும் ஊர்ப்புற நூலகங்களில்  உலக புத்தக தினவிழாவைமுன்னிட்டு,  கட்டுரைப் போட்டி மற்றும் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறந்தாங்கி கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மற்றம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளான காமராசர் நினைவு உயர்நிலைப் பள்ளி மற்றும் சத்தியமூர்த்தி நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 45 பேர் "என்னை செதுக்கிய நூல்கள்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டார்கள்.  இதேபோல் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, மற்றும்  கோட்டைப்பட்டினம்,அரசர்குளம்,  கிரமங்கலம்,மிமீசல், முத்துகுடா, கீழையூர்,சிலட்டூர், மேற்பனைக்காடு, பனங்குளம் உள்ளிட்ட கிளை மற்றும் ஊர்ப்புறநூலகங்களில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளின் கட்டுரைகள்  புதுக்கோட்டை மைய நூலகத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெறும்.  இதைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் முதல் இரு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் மூலம் விருது மற்றும் கேடயம் வழங்கப்படும். 
தாலுகா அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாவட்ட நூலக அலுவலர் மூலம் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அறந்தாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலகர்கள் மா.செந்தில்நாதன், ஆ.கார்த்திகேயன், வாசகர் வட்ட பொருளாளர் எஸ்.வெங்கட்ரமணி, அரசு பள்ளி தமிழாசிரியர் 
முனைவர் சே.யோ.இளங்கோவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com