தொழில்முனைவோர் கருத்தரங்கம்

புதுக்கோட்டை அருகேயுள்ள ஜெ.ஜெ.கல்லூரியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகேயுள்ள ஜெ.ஜெ.கல்லூரியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில், வணிகவியல் துறை, கணினி பயன்பாட்டு அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஜி. பசுபதி பங்கேற்றுப் பேசியது:
தொழில்முனைவோருக்கு தன்னூக்கம் மட்டுமே வெற்றியை பெற்றுத்தரும். நல்ல மனப்பான்மையும், பொருளாதாரம் மற்றும் தொழில்சார் அறிவு பெற்றிருப்பதும் அவசியமாகும். நடைமுறைத் திட்டம் வகுப்பது, எதிர்காலத் திட்டமிடல், பொருளாதாரம் குறித்த அறிவு மற்றும் விழிப்புணர்வு பெற்றிருப்பது மிக அவசியமானதாகும். மேலும், பல்நோக்கு சிந்தனையும், செயலும் தொழில்முனைவோரை தோல்வியில் இருந்து காக்கும் என்றார். 
தொடர்ந்து, கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் கேள்விகள்,  சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
கருத்தரங்கில், கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர்  பேராசிரியர் அடைக்கலவன், துறை பேராசிரியர் லியோ பிராங்கிளின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com