பொன்னமராவதி வலையபட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

பொன்னமராவதி வலையபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 36 பயனாளிகளுக்கு ரூ 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி வலையபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 36 பயனாளிகளுக்கு ரூ 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமிற்கு பொன்னமராவதி வட்டாட்சியர் எஸ். சங்கர் தலைமை வகித்தார். கிராமநிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சங்கரகாமேஸ்வரன் சமூக பாதுகாப்பு திட்டம் குறித்து பேசினார். 
முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், வீட்டுமனைப்பட்டா என 36 பயனாளிகளுக்கு 3.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  மண்டல துணை வட்டாட்சியர் வரதராஜன், துணை ஆணையர் வள்ளி, வேளாண் அலுவலர் அருளானந்தம், வருவாய் ஆய்வாளர் சேகர், கிராமநிர்வாகள் அலுவலர்கள் விஜயா, ரமேஷ், பாண்டியன், பச்சையப்பன், ராஜேந்திரன், முருகேசன், விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர் சரவண பிரபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com