திருச்சி அருகே பிடிபட்ட 350 கிலோ கஞ்சா நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

திருச்சி அருகே  கடத்திவரப்பட்டு  பிடிபட்ட 350 கிலோ கஞ்சா புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி அருகே  கடத்திவரப்பட்டு  பிடிபட்ட 350 கிலோ கஞ்சா புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ஆந்திரத்தில் இருந்து திருச்சி வழியாக டெல்டா மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரையில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே வாழவந்தான்கோட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் அவர்கலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது ஜன.19-ல்  7 மூட்டைகளில்  350 கிலோ கஞ்சா ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற லாரியை  பறிமுதல் செய்து,  மதுரையைச் சேர்ந்த சிவா (31),  சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஆனந்தன் (37), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி. ராஜேந்திரன்(61) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.  விசாரணைக்குப் பின்னர் இவர்களை புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன்  போலீஸார் ஆஜர்படுத்தி, பிடிபட்ட கஞ்சாவையும், லாரியும் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com