நவீன வேளாண் தொழில்நுட்பங்களை  விவசாயிகள் அறிந்துகொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அவசியம் அறிந்துகொள்ளவேண்டும் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அவசியம் அறிந்துகொள்ளவேண்டும் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்தார்.
 புதுக்கோட்டை மாவட்டம்,  திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருவரங்குளம் வட்டாரம், பூமத்தான்பட்டியில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை பரிசோதனைப் பணி, வல்லத்திராக்கோட்டையில் ஒரு விவசாயி தோட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.75,000 மானியத்தில் நிழல்வலைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கரும்பு ஒரு பருகரனை நாற்றங்கால் தயாரித்தல் பணி, வம்பன் பயறுவித்து பெருக்கு பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயந்திரம் மூலம் சான்று பெற்ற விதைகள் சணல் சாக்கு மூட்டைகளில் தைக்கும் பணி, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. வேளாண் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் ராஜகோபால், வேளாண் உதவி இயக்குநர் சக்திவேல், அரசு அலுவலர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com