புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
 கற்பகா செவிலியர் கல்லூரி, ஜெ.ஜெ.செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழாவை கல்லூரியின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து  நடைபெற்ற கலைநிகழ்ச்சியில்  மாணவிகள் தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனம் ஆடினர். போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கைக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். இதில், கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில், கல்லூரி செயலர் கே.ஆர்.குணசேகரன், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் தனம், திலகவதி, குமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நிர்வாக இயக்குநர்  துரை.கார்த்திக் தலைமையில், பாரம்பரிய முறையில் பொங்கலிட்டு, வழிபாடு நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் தலைவர் ஆர்.எம்.கதிரேசன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்,  மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று, சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பொன்னமராவதியில்... பொன்னமராவதியில் உள்ள பள்ளிகளில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பள்ளி முதல்வர் வே.முருகேசன் தலைமை வகித்தார். தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து வகுப்புகள் வாரியாக சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர்.
 மேலும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.  இதில், ராயல் அரிமா சங்கத்தலைவர் எம்.சந்திரன், பொருளர் டிவிஎஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். துணை முதல்வர்கள் கலைமதி, வைதேகி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் தலைமை வகித்தார். இதில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கலிட்டனர்.   இதேபோல், அரிமா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியிலும் மாணவ, மாணவிகள்  பொங்கல் வைத்து கொண்டாடினர்.
அறந்தாங்கியில்... அறந்தாங்கியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
லாரல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி தாளாளர் கே.பாலசஞ்சீவி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பி.கோவிந்தசாமி, சாய் லாரல் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சங்கரன் லாரல், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞான.தனசேகரன் உள்ளிட்டோருடன் மாணவ-மாணவிகள் இணைந்து, சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். அமிர்தா வித்யா விகாஸ் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி தாளாளர் பொன்.துரை தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் தலைவர் ஆர்.முரளிதரன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்று, கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com