முத்தமிழ்ப் பாசறையின் சிறப்புக் கூட்டம்

பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் சிறப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் சிறப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு முத்தமிழ்ப்பாசறை தலைவர் அரு.வே.மாணிக்கவேலு தலைமை வகித்தார். அறங்காவலர்கள் மருத்துவர்கள் மு.சின்னப்பா, எஸ்.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் அ.தட்சிணாமூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் வரும் பிப்.10, 11-ஆம் தேதிகளில் முத்தமிழ்ப்பாசறையின் தமிழர் திருநாள் விழாவினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  விழாவின் தொடக்கமாக 10-ஆம் தேதி தமிழன்னை ஊர்வலம் மற்றும் இலக்கிய சொற்பொழிவுகள், 11-ஆம் தேதி தமிழர் பாரம்பரியம் போற்றும் விளையாட்டுப் போட்டிகள், அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாசறை பட்டயம், சிறப்பான முறையில் கற்பித்த தமிழாசிரியர்களுக்கு தொல்காப்பியனார் விருது வழங்கும் விழா, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் நெ.ராமச்சந்திரன், சி.எஸ்.முருகேசன், வே.முருகேசன், செ.பாலமுரளி, ப.சதாசிவம், ராஜா முகமது, கு.புஷ்பராஜ், வெங்கடேஷ்குப்தா, வைகை பிரபா, மலைச்சாமி, சி.முடியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அறங்காவலர் எம்.சந்திரன் வரவேற்றார். அறங்காவலர் ச. சோலையப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com