தேச நிர்மாணப் பணியில் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும்

இளைஞர்கள் தங்களை தேச நிர்மாணப் பணியில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட இளையோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் க.சுப்பிரமணியன் .

இளைஞர்கள் தங்களை தேச நிர்மாணப் பணியில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட இளையோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் க.சுப்பிரமணியன் .
நேரு யுவகேந்திரா சார்பில் வட்டார அளவிலான இளையோர் பாராளுமன்ற விழா புதுகையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.விழாவிற்கு, உருவம்பட்டி பள்ளி ஆசிரியர் முனியசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில், பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட மன்றங்களுக்கு பரிசு வழங்கி மாவட்ட இளையோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் க. சுப்பிரமணியன் பேசியது: மத்திய அரசின் திட்டங்களை இளையோர் மன்றங்கள் செயல்படுத்த வேண்டும். மக்கள் பிரச்னைகளை அடையாளம் கண்டு அவற்றை சுமூகமான முறையில் இளைஞர்கள் தீர்க்க வேண்டும். தூய்மை இந்தியாவின் 100 மணிநேர கோடைகால பங்கேற்பு திட்டத்தில் 100 மணி நேரம் பணியாற்றி கிராமத்தை தூய்மையான முறையில் மாற்றிய இளைஞர் மன்றங்கள் அல்லது விழிப்புணர்வு செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவில் இப்பணியில் சிறப்பாக செயல்படும் மூன்று மன்றங்களுக்கு ரூ. 30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் சிறந்த மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மூன்று மன்றங்களுக்கு முறையே ரூ. 50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று மன்றங்களுக்கு ரூ. 2 லட்சம்,1 லட்சம்,50 ஆயிரம் பரிசும் வழங்கப்படும். எனவே இளைஞர் மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நேரு யுவகேந்திரா விழாக்களிலும், பணிகளிலும், நிகழ்ச்சிகளும் பங்கேற்று இளைஞர்கள் தங்களை தேச நிர்மாணப் பணியில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com