பொன்னமராவதி, அறந்தாங்கியில் நாளை மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப் பகுதியில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.

பொன்னமராவதி மற்றும் சுற்றுப் பகுதியில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவலூர், கோவனூர், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கண்டியாநத்தம், தூத்தூர், தொட்டியம்பட்டி, மைலாப்பூர், வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
அறந்தாங்கி: அறந்தாங்கி அருகேயுள்ள அழியாநிலை, ஆவணத்தான்கோட்டை மற்றும்
நாகுடி ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் அறந்தாங்கி நகர், தொழிற்சாலை, தாந்தாணி, சிலட்டூர், தேனிப்பட்டி ஆகிய ஊர்கள், பெரியாலூர், குளமங்களம் மற்றும் மறமடக்கி திருநாளுர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வல்லவாரி, சுப்பிரமணியபுரம், அரசர்குளம், பெருங்காடு, மேல்மங்கலம், நாகுடி, தொண்டைமானேந்தல், அத்தாணி, கட்டுமாவடி மற்றும் வேட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கி. பழனிவேலு தெரிவித்துள்ளார்.
விராலிமலை: அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அன்னவாசல், சித்தன்னவாசல்,, செங்கம்பட்டி, காலாடிப்பட்டிசத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், தச்சம்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர்,கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் கா. ஆறுமுகம்தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com