கந்தர்வகோட்டையில்  நொங்கு விலை ஏற்றம்

கந்தர்வகோட்டையில் கோடை வெயிலுக்கு இதமான நொங்கின் விலையோ தாறுமாறாக ஏறியுள்ளது. 

கந்தர்வகோட்டையில் கோடை வெயிலுக்கு இதமான நொங்கின் விலையோ தாறுமாறாக ஏறியுள்ளது. 
கந்தர்வகோட்டையில் கத்திரி வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் இளநீர், நொங்கு உள்ளிட்ட இயற்கை பானங்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே கோடைக்கு இதமாக நொங்கு சொளை விற்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ரூ.10-க்கு 6 சொளை விற்கப்பட்டது. நிகழாண்டு ரூ.10-க்கு 4 சொளை விற்கபட்டு வருகிறது. மறுபுறம், பனை மரங்கள் தோப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது பனை மரங்களைத் தேடித்தேடி நொங்கு கொண்டு வருவதாகக் கூறுகின்றனர் நொங்கு வியாபாரிகள். மேலும், அழிவின் விழிம்பில் உள்ள பனைமரத்தைக் காக்க அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com