குடுமியான் பள்ளியில் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மைக்

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். பயிற்சியை தொடங்கி வைத்து அன்னவாசல் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னழகு பேசியது:
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இப்பணியை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு பள்ளிகளை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் பணிகளை மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. மாணவர் சேர்க்கை, பள்ளி வளாகங்களை பராமரித்தல், சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக்குதல், அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட செயல்கள் மேலாண்மைக் குழுவின் பொறுப்பாகும். கல்வி என்பது சமூகத்திற்கு இன்றியமையாத் தேவையாகும். தனியொருவரின் நடத்தையில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தி நல்ல மாணவர்களை உருவாக்கி மீண்டும் சமுதாயத்திடம் ஒப்படைக்கும் மிகச் சிறந்த கல்விப் பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். 
பள்ளி மேலாண்மைக் குழுவானது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்குழுக்களைச் சிறப்பாகச் செயல்படும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தல், 
குழந்தைகளின் உரிமைகள்,  மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச் செய்தல், பாலினப் பாகுபாடு, பேரிடர் மேலாண்மை, உள்கட்டமைப்பு, பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது என்றார். கருத்தாளர்களாக வட்டார வளமைய பயிற்றுநர்கள், குறுவள மைய தலைமைஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய பயிற்றுநர் கண்ணன் செய்திருந்தார். 
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பயிற்சி முகாமிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அ. ஆரோக்கிய அரசு தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ச. சிந்து முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ச. பழனிவேல் வரவேற்றார்.  உறுப்பினர்களுக்கான பயிற்சி குறித்து ஆசிரியர் பயிற்றுநர் டி. பாரதிதாசன் விளக்கினார். 
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தரமான கல்வி முறை, முழு சுகாதாரத் தமிழகம், பேரிடர் மேலாண்மை பயிற்சி, மாதிரி மேலாண்மைக் குழு நடத்துவதன் நோக்கம், பள்ளி வளர்சித் திட்டம்
 தயாரித்து செயல்படுத்துதல், பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்கள் பேசினர். முகாமில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அக்கச்சிப்பட்டி தொடக்கப் பள்ளி, ராசாப்பட்டி, மருங்கூரணி, பெருச்சிவண்ணியம் பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com