இ-சேவை மையத்தில் கூடுதலாக  15 வகை சான்றுகள் பெறும் வசதி

இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் கூடுதலாக 15 வகையான சான்றிதழ்கள் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.

இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் கூடுதலாக 15 வகையான சான்றிதழ்கள் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுக்கோட்டை மாவட்ட வருவாய்,  பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதுகை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு வருமானச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 15  புதிய இணையவழி சேவைகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். 
தற்போது இ-சேவை மையங்கள் மூலம் விவசாய வருமானச் சான்று, வேலையில்லாமைக்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், கல்வி ஆவணங்கள் தொலைந்தமைக்கான சான்றிதழ், கலப்பு திருமணச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், இதர பிற்பட்ட வகுப்பினர் சான்றிதழ், சிறு மற்றும் குறு விவசாயச் சான்றிதழ், சொத்து மதிப்புச் சான்றிதழ், ஆண் வாரிசு இன்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், அடகு வணிகம் உரிமம், வட்டிக்குப் பணம் கொடுப்போர் உரிமம், குடும்ப குடிப்பெயர்வு  சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட 15 சேவைகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதுகை மாவட்ட பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பித்து மேற்குறிப்பிட்ட சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இனி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 
இச்சான்றுகள் வழங்கப்படாது. புதுகை மாவட்டத்தில் அரசு இ-சேவை மையங்கள் அரசு கேபிள் டி.வி நிறுவனம், வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், மகளிர் திட்டம் ஆகியவை மூலம் இயங்கி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com