மக்கள் தொடர்பு முகாமில் 267 பயனாளிக்கு ரூ.42.74 லட்சம் நல உதவி

பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட ஆலவயல் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 267

பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட ஆலவயல் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 267 பயனாளிகளுக்கு ரூ.42.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாமிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசியது: விவசாயம் சார்ந்த ஆலவயலில் உற்பத்தி செய்யப்படும் கத்தரிக்காய் இந்திய அளவில் பிரபலமானதாகும்.
ஆலவயலில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசன திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் கருவிகளை பெற வேளாண் குழுக்கள் அமைத்து பயன்பெற வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.610 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் எஞ்சியுள்ள 10 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படும். தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக முழுத் தேர்ச்சி பெற்று வரும் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடத்திற்கு பொதுப்பணித்துறையின் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டதும், நடப்பு கல்வியாண்டில் பயன்பாடிற்கு கொண்டு வரப்படும். பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள சமுதாயக் கூடம் சரிசெய்யப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாவட்டத்தில் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகின்றனர் என்றார்.
தொடர்ந்து, வருவாய், வேளாண்மை, சமூகநலம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 267 பயனாளிகளுக்கு ரூ.42.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், வேளாண் இணை இயக்குனர் மனோகரன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, பொன்னமராவதி வட்டாட்சியர் எஸ்.சங்கர், ஒன்றிய ஆணையர் எஸ்.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com