அறந்தாங்கி அரசு பள்ளியில் கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சி

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்   அறந்தாங்கி கல்வி மாவட்ட  அளவிலான அறிவியல்

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்   அறந்தாங்கி கல்வி மாவட்ட  அளவிலான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி கல்வி மாவட்ட  அலுவலர் கு. திராவிடச்செல்வம்  தலைமையில் நடைபெற்ற கண்காட்சியை  அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் சு. தட்சிணாமூர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில்  12 நடுநிலைப்பள்ளிகள், 39 உயர்நிலைப் பள்ளிகள், 38 மேல்நிலைப் பள்ளிகள்  கலந்து கொண்டன.  6-ம் வகுப்பு  முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு  ஒரு காட்சிப் பொருள் வீதம்  8 முதல் 10-ம் வகுப்பு வரை  உள்ள 2 மாணவர்களுக்கு ஒரு காட்சிப் பொருள் வீதம்  மற்றும்  ஆசிரியர்களுக்கான காட்சிப்  பொருட்கள் வைக்கப்பட்டன.  இவற்றை  96  பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்.
மாணவருக்கான  ஒரு காட்சிப் பிரிவில்  முதல் பரிசை  அரையப்பட்டி பள்ளி மாணவர் த. உதயதனுஷ்  2-ஆவது  பரிசை  நாயக்கர்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் தினேஷ்குமார் 3-ஆவது  பரிசை  அம்மாபட்டினம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் ஆர். கார்த்திகேயன் பெற்றனர்.
இரண்டு மாணவர் பிரிவில்  ஒரு காட்சிப்  பொருளுக்கு  முதல்பரிசு  பரமந்தூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி மலாசா மற்றும் ஜனனிக்கும், 2-ஆவது  பரிசு சுப்பிரமணியபுரம்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அருண், அசரப்  உள்ளிட்டோருக்கும், 3-ஆவது பரிசு  கே.வி.கோட்டை  அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்  பூமிநாதன், அருண் உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான காட்சிப்பிரிவில்  முதல் பரிசு  சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்  ஆர். கோவிந்தராஜனுக்கும், 2-ஆவது பரிசு  ஆலங்குடி  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கோமதிக்கும் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர்கள்  அறந்தாங்கி சி. கார்த்திகா, மீமிசல் ஆர். ராமு, குளமங்கலம் வடக்கு எஸ். ஸ்ரீதர், அரசர்குளம் கிழக்கு  ஆர். தனசேகரன் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அ. ராஜசேகர் வரவேற்றார், வல்லத்திராக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சி. சின்னப்பன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com