ஆயுதபூஜைக்கான பழம், பூக்கள் விலை அதிகரித்தும் விற்பனை மும்முரம்

கந்தர்வகோட்டையில் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாட்டத்துக்கான பழம், பூக்கள் விலை

கந்தர்வகோட்டையில் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாட்டத்துக்கான பழம், பூக்கள் விலை அதிகரித்த போதிலும் விற்பனை  மும்முரமாக நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை விழாவை அனைத்துத் தரப்பினராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆயுத பூஜையின் முக்கிய பொருள்களான வெள்ளை கொண்டக் கடலை கிலோ ரூ.100க்கும், கருப்புக் கடலை ரூ.80ம், பொறி கிலோ ரூ.70க்கு விற்கப்பட்டது. டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்தன் விளைவால் தற்போது வெள்ளைநிற கொண்டக் கடலை முதல் ரகம் ரூ.80, கருப்புக் கடலை ரூ.60, பொறி கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் பூஜைக்கு தேவையான வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகள், பூக்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் விலையை பொருள்படுத்தாமல் ஆயுதபூஜையை சிறப்பாக கொண்டாடும் வகையில் கந்தர்வகோட்டையில் உள்ள சந்தையில் அனைத்துப் பொருள்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com