கூட்டுறவு சங்கத் தேர்தலில் அமமுக வெற்றி

அறந்தாங்கி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில்   அமமுக கட்சியைச் சேர்ந்த  8 பேர் வெற்றி பெற்றனர்.

அறந்தாங்கி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில்   அமமுக கட்சியைச் சேர்ந்த  8 பேர் வெற்றி பெற்றனர்.
அறந்தாங்கி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் அமமுகவினரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் வாங்கவில்லை எனக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்னாள் தலைவர் சங்கிலிமுத்து கருப்பையா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். 
இதையடுத்து, அனைவரது மனுவையும் பெற்று தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புக்கிடையே தேர்தல்  அலுவலர் வினிதா தலைமையில் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.
இதில், பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட சங்கிலிமுத்து கருப்பையா தலைமையில் இயக்குநர் பதவிக்கு போட்டியிட்ட அக்கட்சியினர் 8 பேர் வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, திமுகவைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.எம்.பெரியசாமி, திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கோ.சக்திவேல் உள்ளிட்டோர் தோல்வியுற்றனர்.
இதனைத் தொடர்ந்து, அமமுக மாவட்டச் செயலாளர் பரணி.கார்த்திகேயன், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரத்தினசபாபதி, நகரச் செயலாளர் க.சிவசண்முகம் உள்ளிட்டோருடன் வெற்றி பெற்றவர்கள் ஊர்வலமாகச் சென்று அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அறந்தாங்கியில் அனைத்து கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும்கட்சியினர் தேர்வாகி உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி நடைபெற்ற இச்சங்கத்துக்கான தேர்தலில்  அதிமுக, திமுகவால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com