அட்சய திருதியை: கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 கோயில்களின் பெருமாள் சுவாமிகளும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளிய கருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது.

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 கோயில்களின் பெருமாள் சுவாமிகளும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளிய கருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3 ஆவது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு டி.எஸ்.ஆர். பெரியதெருவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி அட்சய திருதி நாளான சனிக்கிழமை கும்பகோணம் டி.எஸ்.ஆர் பெரிய தெருவில், காசிக்கடை வர்த்தகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் சாரங்கபாணிசுவாமி, சக்கரபாணிசுவாமி, ராமசுவாமி, ஆதிவராகசுவாமி, ராஜகோபாலசுவாமி, பாட்சாரியார் தெரு கிருஷ்ணசுவாமி, வெங்கட்ராயர் அக்ரஹாரம் பட்டாபிராமசுவாமி, சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி, மல்லுகச்செட்டித்தெரு சந்தானகோபாலகிருஷ்ணசுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாளும் எழுந்தருளி 12 கருட சேவை நடைபெற்றது.
உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com