ஒரத்தநாடு அருகே பொதுமக்கள் - போலீஸார் இடையே மோதல்: 50 பேர் மீது வழக்கு; 8 பேர் கைது

ஒரத்தநாடு அருகே கோயில் திருவிழாவில் கடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்ததால் பொதுமக்களும், போலீஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரத்தநாடு அருகே கோயில் திருவிழாவில் கடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்ததால் பொதுமக்களும், போலீஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிந்த போலீஸார் 8 பேரை கைது செய்தனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள தோப்புநாயகம் பெரமையாநாதர் கோயிலில் திருவிழா நடத்துவது
தொடர்பாக இருதரப்பினர்களுக்கு இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அனுமதியுடன் ஒரு பிரிவினர் வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் திருவிழா நடத்தினர்.
இந்நிலையில் கோயில் வளாகத்தில் அர்ச்சனைத் தட்டு கடை மற்றும் விளையாட்டு பொருள்கள் கடை வைக்கப்பட்டிருந்த்தது. இந்நிலையில் இரவு 10 மணிக்கு அங்கு வந்த கோட்டாட்சியர் சுரேஷ், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்மேனன் மற்றும் போலீஸார் இங்கு கடை வைக்க அனுமதி இல்லை எனக் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசித் தாக்கினர். இதில் பொதுமக்கள் 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஒரத்தநாடு வட்டாட்சியர் தமிழ்ஜெயந்தி வாட்டத்திக்கோட்டை காவல் நிலையத்தில் திருவிழா நடத்திய தரப்பினை சேர்ந்த 50 பேர் மீது புகார் கொடுத்தார். இதன் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ் (32), சின்னப்பா (35), முருகேஷ் (34), பாஸ்கர் (23), லோôகநாதன் (25), அன்பரசன் (22), குமார் (36), விஜயேந்திரன் (30) ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com