கோடைகால கலைப் பயிற்சி நாளை தொடக்கம்

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் கலை, பண்பாட்டுத் துறை சார்பில் கோடைகால கலைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (மே 1) தொடங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் கலை, பண்பாட்டுத் துறை சார்பில் கோடைகால கலைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (மே 1) தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கலை, பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூர் மண்டலத் துணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசுக் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்டந்தோறும் சவகர் சிறுவர் மன்றம் அமைப்பை ஏற்படுத்தி 5 வயது முதல் 16 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குக் குரலிசை, நடனம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகள் அளித்து படைப்பாற்றல் திறனை வளர்த்து வருகிறது.
இந்நிலையில், 2017 - 18 ஆம் ஆண்டுக்கான கோடைகால கலைப் பயிற்சி முகாம் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை முதல் மே 10-ஆம் தேதி வரை 10 நாள்கள் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், குரலிசை, நடனம், ஓவியம், கராத்தே, சிலம்பம் ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது முதல் 16 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com