பாரத் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட்டின் 8-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா மற்றும் இந்தியன் இன்ஸ்டியூட்டின் 8-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை பாரத் கல்லூரிச் செயலர் புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பாரத் கல்லூரி முதல்வர் வீராசாமி ஆண்டறிக்கை வாசித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) ஆர். திருமுருகன் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசியது:
கல்லூரி மாணவர்களால், இளைஞர்களால் சமூகத்தில் அமைதி ஏற்பட வேண்டும். வெற்றி அடைவது குறித்து பல கருத்துகள் உள்ளன. வெற்றியாளர்களின் பண்புகளையும், அடையாளங்களையும் நாம் உள்வாங்கிக் கொண்டால் வெற்றி அடையலாம். மன ஊக்கமும், கடின உழைப்புமே வெற்றியின் முக்கிய ரகசியம். வெற்றியும், மகிழ்ச்சியும் இணைந்தே இருக்கும். விரும்பியதை அடைவது வெற்றி. அடைந்த வெற்றியால் பெறுவது மகிழ்ச்சி என்றார் அவர். விழாவில் மொத்தம் 668 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com