பேராவூரணியில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

பேராவூரணி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதார வாகன பிரசாரம் சனிக்கிழமை தொடங்கியது.

பேராவூரணி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதார வாகன பிரசாரம் சனிக்கிழமை தொடங்கியது.
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் மற்றும் பொன்காடு பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சுகாதார விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் விழிப்புணர்வு அறிவுரை, சுகாதாரம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. வாகனத்தின் உள்ளே கொசுப்புழு உற்பத்தியாவது, அவற்றை தடுப்பது குறித்து கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. ஒளித்திரை மூலமும் ஒளிபரப்பப்படுகிறது. வாகனத்தில் உள்ள மருத்துவ நிபுணர், உதவியாளர் மூலம் நடமாடும் மருத்துவ முகாமும் செயல்படுகிறது.
இந்த வாகனத்தை புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியிலிருந்து வட்டார மருத்துவ அலுவலர் வி. செளந்தர்ராஜன் தலைமையில் பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு கொடியசைத்து தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவடிவேல், மருத்துவர்கள் அறிவானந்தம், கீர்த்திகா, கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன், ம.கோ. இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com