உயிரி தொழில்நுட்ப கருத்தரங்கம்

தஞ்சாவூர் பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் விலங்கியல் மற்றும் உயிரிதொழில்நுட்பவியல் துறை சார்பில் உடல் நலம்

தஞ்சாவூர் பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் விலங்கியல் மற்றும் உயிரிதொழில்நுட்பவியல் துறை சார்பில் உடல் நலம் காத்தலும், உயிரி தொழில்நுட்பமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து இரு நாள் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஆர். தாமோதரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் எஸ். ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார்.
2-ம் நாளான வெள்ளிக்கிழமை மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ. பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியைகள் என். சந்திரகலா, எ. ராதா, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியை எம். ஆனந்தசித்ரா ஆகியோர் பேசினர். இதில், சுமார் 175 பேர் ஆய்வு கட்டுரைகள் அளித்தனர்.  கல்லூரி விலங்கியல் துறைப் பேராசியர்கள் எஸ். கணேசன், ஆர். ராஜ்குமார், பி. நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com