அதிரை அருகே தொடரும் அவலம்: வீணாகக் கடலில் கலக்கும் அணை உபரி நீர்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே தொக்காலிக்காடு கிராமத்திலுள்ள மகாராஜசமுத்திரம் அணைக்கட்டில் நீர் வரத்து அதிகமாகி நிரம்பிய பின்னர் பெருக்கெடுக்கும் உபரி நீர் வீணாக கடலில் சென்று

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே தொக்காலிக்காடு கிராமத்திலுள்ள மகாராஜசமுத்திரம் அணைக்கட்டில் நீர் வரத்து அதிகமாகி நிரம்பிய பின்னர் பெருக்கெடுக்கும் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தொக்காலிக்காடு கிராமத்தில் கடந்த 1955-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டது மகாராஜசமுத்திரம் அணைக்கட்டு .
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு இப்பகுதி விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
இப்பகுதியில் அதிகளவில் மழை பெய்யும்போதும், விவசாயத்திற்காக கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போதும் அணைக்கட்டில் நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்கும். இதனால் அணை நிரம்பிய பிறகு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.
வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை, வறட்சி காலங்களில் அதிராம்பட்டினம், தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை, நடுவிக்காடு, மிலாரிக்காடு ஆகிய கிராமங்களின் விவசாயத்திற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் நீர்நிலை ஆர்வலர்கள் கூறும் ஆலோசனை:
மகாராஜசமுத்திரம் அணையின் உயரத்தை அதிகப்படுத்தி, சிஎம்பி வாய்க்கால் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு குழாய்கள் பதித்து, 100 குதிரை திறன் கொண்ட நீர் இறைக்கும் மோட்டார் மூலம் பம்பிங் செய்து சிஎம்பி வாய்க்கால் வழியாக நீரை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தினால் அதிரை பகுதி கிராமங்கள் மட்டுமல்லாமல் கடைமடைப் பகுதி பாசன விவசாயிகள் அனைவருமே பயன் பெறலாம் என்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com