நீட் தேர்வுக்காகப் பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு

நீட் தேர்வுக்காகத் தமிழகத்தில் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.

நீட் தேர்வுக்காகத் தமிழகத்தில் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மாதாகோட்டை சாலையில் மதர் தெரசா பவுன்டேஷன் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயிப்பது நிஜம் என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியது:
தமிழகத்தில் நீட் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத் திட்டத்தை உருவாக்கத் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களும் சிறந்த மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன என்றார் வைத்திலிங்கம்.
மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைமை ஆலோசகர் பி. ராமசாமி, உயர்கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் ஏ. காந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி உள்ளிட்டோர் பேசினர். மதர் தெரசா பவுண்டேசன் உதவியுடன் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் 30 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 3.65 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
பவுண்டேசன் அறங்காவலர் கோவிந்தராஜு, குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத் தலைவர் ஏ.கே. நடேசன், தஞ்சாவூர் ரம்யா சத்தியநாதன் கல்வி நிறுவனத் தலைவர் ஆர். சத்தியநாதன், தாமரை பன்னாட்டுப் பள்ளி நிறுவனர் டி. வெங்கடேசன், பவுண்டேசன் தலைவர் ஏ.ஆர். சவரிமுத்து, அறங்காவலர்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜு, ராபர்ட் பெல்லார்மின், முரளி கிருஷ்ணன், திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் மெர்சி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெரோம், ஜெனிபர், செய்தித் தொடர்பு அலுவலர் ரோசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com