பேராவூரணியில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

பேராவூரணி லயன்ஸ் சங்கம், தஞ்சை வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி லயன்ஸ் சங்கம், தஞ்சை வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
லயன்ஸ் சங்கத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார்.
பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒட்டங்காடு கருப்பையாஉடையார் உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 405 மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு வாசன் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையிலானகுழுவினர் கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.
முகாமில் தலைமையாசிரியர் கவிமணி, ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, ரஞ்சிதா, குளோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். லயன்ஸ் சங்கச் செயலர் ராமநாதன் வரவேற்றார். பொருளாளர் துரையரசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com