லஞ்சம் வாங்கிய வழக்கு: சார்-பதிவாளர் உள்பட 2 பேருக்கு ஓராண்டு சிறை

லஞ்ச வழக்கில், திருவிடைமருதூர் சார் பதிவாளர் உள்பட 2 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

லஞ்ச வழக்கில், திருவிடைமருதூர் சார் பதிவாளர் உள்பட 2 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட கீழ மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் வி. பிரபாகர். இவர், தான் பதிவு செய்த கிரய ஆவணத்தை வழங்க திருவிடைமருதூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு
கடந்த 2010-ஆம் ஆண்டு, அக்டோபர் 1-ஆம் தேதி சென்றார்.
 அப்போது, அங்கு பணியிலிருந்த சார் பதிவாளர் வி. ராமநாதன் ரூ. 1,000 லஞ்சம் கேட்டதாக பிரபாகர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த லஞ்ச பணத்தை ஆவண எழுத்தர்
ஏ.டி. பசுபதி மூலம் சார் பதிவாளர் ராமநாதன் பெற்றுக் கொண்டபோது, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில், கடந்த 29-ஆம் தேதி அன்று ராமநாதன், பசுபதிக்கு ஓராண்டு
சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com