விவசாயிகளுக்கு அரப்பு மோர் தயாரிப்பு செயல் விளக்கம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு அரப்பு மோர் கரைசல் தயாரிப்பு செயல்விளக்கம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு அரப்பு மோர் கரைசல் தயாரிப்பு செயல்விளக்கம் புதன்கிழமை அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் ஆர்விஎஸ் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் 4-ஆம் ஆண்டு மாணவிகள் 10 பேர் மாணவி ராஜராஜேஸ்வரி தலைமையில் குழுவாக இணைந்து ஊரக வேளாண்மை அனுபவ  திட்டத்தின் கீழ்
பயிற்சி பெறுகின்றனர்.  
பட்டுக்கோட்டை வேளாண் மைய உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் மேற்பார்வையில் இவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த மாணவிகள் பயிற்சியின் ஒரு பகுதியாக, திட்டக்குடி கிராமத்தில் உள்ள
கல்விக்கரசி என்பவர் வயலில் அரப்பு மோர் கரைசல் தயாரிப்பது பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். அப்போது, 1முதல் 2 கிலோ அரப்பு, 5 லிட்டர் புளித்த மோர், 1 லிட்டர் அழுகிய
பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை 7 நாள்கள் நொதிக்க விட்டு, 10 லிட்டர் தண்ணீருடன் 1 லிட்டர் அரப்பு மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து,  பூ பூக்கும் தருவாயில் தெளித்தால் பூச்சி மற்றும்
பூஞ்சை தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தலாம். இதனை அனைத்து வகையானப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் என்றனர்.
 மண்புழு உரம் தயாரிப்பு: மக்கும் கழிவுகளை சிறு, சிறு துண்டுகளாக எடுத்து  மூட்டம் போட்டு, அதில்  சாண கரைசலை தெளித்து, 20 நாள்களுக்கு மக்க விட வேண்டும். மண் புழு உரப்படுக்கை
தயாரிக்க கடினமான தரையை தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். மண்புழு உரம் தயாரித்த பின்னர் மண்புழுக்களை பிரித்து, மண்புழு உரத்தை சல்லடையிலிட்டு சலிக்கும் போது மக்கிய மற்றும்
மக்காத கழிவுகளை தனித்தனியே பிரித்து எடுக்கலாம். மற்ற மக்கும் உரங்களை விட இதில் சத்துக்கள் அதிகமாக இருக்கும். மேலும், காற்றிலுள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தும் தன்மை, கரையாமல்
இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கும் வல்லமை கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com