அடுத்த கட்டமாக ரூ. 14 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்தக் கட்டமாக ரூ. 14 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு கிடைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்தக் கட்டமாக ரூ. 14 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு கிடைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரபி பருவ சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு பிரிமியம் செலுத்தி விவசாயிகளுக்கு நியு இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்துக்கு ரூ. 240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுவரை ரூ. 210 கோடிக்கு பட்டியல் பெறப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அடுத்த கட்டமாக ரூ. 14 கோடிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பட்டியலை தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி பெற்றுள்ளது. 
இத்தொகை தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பிரிமியம் செலுத்திய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ. 224 கோடிக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. மேலும், பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதற்கான உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com