தஞ்சாவூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் இணையம் வழியே கண்காணிப்பு: ரூ. 8.97 கோடி மதிப்பில் மின்சேமிப்பு திட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.8.97 கோடி மதிப்பில் மின்சேமிப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக மின் விளக்குகளும் எல்இடி

தஞ்சாவூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.8.97 கோடி மதிப்பில் மின்சேமிப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக மின் விளக்குகளும் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் தெருவிளக்குகள் இணையம் வழி யே கண்காணிக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுக்குள்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகள் உள்பட 1,100 தெருக்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. 
ஆண்டுக்கு 40,97,800 கிலோ வாட் மின்சாரம் பயன்படுத்தி, ரூ.2.58 கோடி மின்கட்டணமாக மாநகராட்சி செலுத்தி வருகிறது. 
தஞ்சை மாநகராட்சி மின்கட்டணத்தைக் குறைக்கும் வகையில், ரூ.8.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மின்சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் மின் செலவை 40 சதம் குறைக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மேலும் தெரிவித்தது: 
மின்சேமிப்புத் திட்டத்தின் முதல்கட்டமாக 40 வாட்ஸ் மின்திறனுள்ள 7,287 குழல்விளக்குள், 45 வாட்ஸ் மின்திறனுள்ள சிஎஃப்எல் விளக்குகள் என அனைத்து விளக்குகளும் 20 வாட்ஸ் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  
இதில் 51 வார்டுகளில் இதுவரை 2,798 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  
மேலும், இத்திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் தெருவிளக்குகளை கண்காணிக்கும் வகையில்,  மாநகராட்சி அலுவலகத்தில்  உள்ள மத்திய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. 
இதன்படி 10-க்கும் மேற்பட்ட விளக்குகளுக்கு ஒரு பில்லர் பாக்ஸ் வைக்கப்பட்டு, அதில் ஜிஎஸ்எம் சிம் கார்டுகள் பொருத்தப்பட்டு, மாநகராட்சி அலுவலகத்தில்  உள்ள மத்திய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கணினி வழியே கண்காணிக்கப்படும். 
இதனால் மாநகராட்சிக்குள்பட்ட வார்டுப் பகுதிகளில் எரியாத விளக்குகள் உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள், தெருவிளக்குகள் தொடர்பான புகார்களை 84899 20606 என்ற எண்ணில் தெரிவித்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்றனர். 

விளக்குகள் எண்ணிக்கை
குழல் விளக்குகள்    7,287
சோடியம் ஆவி விளக்குகள்    2,691
மெட்டல் ஹாலைடு விளக்குகள்    41
சிஎஃப்எல் விளக்குகள்    308
எல்.இ.டி. விளக்குகள்    285
அதிக திறனுள்ள சிஎஃப்எல் விளக்குகள்    359
மொத்தம்    10,971  
மின்சேமிப்புத் திட்டம் ரூ.8.97 கோடி 
புதிய விளக்குகள் பொருத்துதல் 
மற்றும் பராமரிப்பு    ரூ.5.38 கோடி   
மத்திய கண்காணிப்பு மற்றும் 
கட்டுப்பாட்டு மையம்     ரூ.22.5 லட்சம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com