விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கும்பகோணம் அருகே  விபத்து இழப்பீடு வழங்காததால் புதன்கிழமை  அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கும்பகோணம் அருகே  விபத்து இழப்பீடு வழங்காததால் புதன்கிழமை  அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திருவிடைமருதூர் தாலுகா அந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஆனந்தவள்ளி (45),  ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2008 மே மாதம் 20-ல் ஆனந்தவள்ளி சுவாமிமலைக்கு அரசு டவுன் பஸ்சில் சென்றுவிட்டு வரும்போது விபத்து ஏற்பட்டு அவரது வலது கை துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதையடுத்து அவர் கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதி சிவபிரகாசம் கடந்த 25-7-2013 அன்று பாதிக்கப்பட்ட ஆனந்தவள்ளிக்கு இழப்பீடு தொகையாக ரூ. 4,48,000 வழங்க உத்தரவிட்டார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்தத் தொகையை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் வழங்காததால் ஆனந்தவள்ளியின் சார்பில் வழக்குரைஞர்  மருதையன் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் பணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அதை விசாரித்த நீதிபதி ஜான்சுந்தர்லால் கடந்த ஏப்ரல் மாதம் இழப்பீடு தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 6 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும், இல்லையெனில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.  இந்நிலையில் நீதிபதியின் உத்தரவின்பேரில் புதன்கிழமை  கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தஞ்சாவூர் சென்னை செல்லும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்  மற்றும் அவரது உதவியாளர்கள், மனுதாரர் ஆகியோர் சென்று ஜப்தி செய்து கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com