"மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியில் கவனம் தேவை'

மக்கள்தொகை  தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தின் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வாணையக் குழுத் தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா.

மக்கள்தொகை  தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தின் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வாணையக் குழுத் தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா.
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் அவர்  மேலும் பேசியது: அறுவடைக்கு பின் சார்ந்த இழப்பீடுகள் இந்திய அளவில் ரூ.  92,460 கோடி அளவுக்கு உள்ளது. இவற்றில் ரூ. 40,800 கோடி அளவுக்குப் பழங்கள் மற்றும் காய்கறிகள் விரயமாகின்றன.
சத்தான உணவுகளை உட்கொள்வதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் மக்கள்தொகையில் நமது நாடு சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெறும் நிலையில் உள்ளது. எனவே,  அதிகரிக்கும்  மக்கள்தொகையைக் கணக்கில்கொண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு உற்பத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  உலக அளவில்  உள்ள 6.5 பில்லியன் மக்கள்தொகையில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். இவர்களில் 300 மில்லியன் பேர் இந்தியர்கள். மேலும், வளரும் குழந்தைகளின் முதல் 1,000 நாள்களுக்கான ஊட்டச்சத்து மிகவும் அவசியமாக உள்ளது. இதுவே, ஆயுள் முழுவதுக்குமான ஊட்டச்சத்துக்குப் பங்களிக்கும். இதை கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் ஸ்ரீவஸ்தவா.
ஐ.டி.சி. ஆய்வுக் குழுத் தலைவர் லட்சுமணன், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com