மாநகராட்சி அலுவலகம் தாற்காலிக இடமாற்றம்

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டப்படவுள்ளதால், அலுவலகம் தாற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டப்படவுள்ளதால், அலுவலகம் தாற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்குப் புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. எனவே, ஏற்கெனவே செயல்பட்டு வந்த அலுவலகம் தாற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ளஅறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் ஆணையர் அலுவலகம், நிர்வாகப் பிரிவு, பொறியாளர் பிரிவு, கணக்கர் பிரிவு, அஞ்சல் பிரிவு, கணினி பிரிவு ஆகியவை செயல்படும்.
கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாநகர் நலப் பிரிவு, வருவாய் பிரிவு, மாநகரமைப்பு பிரிவு, சர்வே பிரிவு ஆகியவை செயல்படும்.
பொதுமக்களின் வசதி கருதி பிறப்பு, இறப்புச் சான்றிதழ் விண்ணப்பிப்பவர்களுக்கும், வரி செலுத்த வருபவர்களுக்கும் ஏற்கெனவே மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த கணினி வரி வசூல் மையம் தொடர்ந்து செயல்படும். இதேபோல, கல்லுக்குளம், ராஜப்பா பூங்கா, முனிசிபல் காலனியிலும் செயல்படும். அனைத்து வரி வசூல் மையங்களிலும் பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கான கட்டணங்களைச் செலுத்தலாம்.
புதிதாக மாற்றம் செய்யப்படவுள்ள அலுவலகங்களில் வசூல் மையம் தொடங்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியால் நிறைவேற்றப்படும் அனைத்து வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து புகார் மனுக்களும் புதிய அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com