"குழந்தைகளை அறிவாளர்களாக்குவதே நோக்கமாக இருக்க வேண்டும்

குழந்தைகளை முழு அறிவு பெற்றவர்களாக மாற்றுவது ஒன்றுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் திருச்சி ஷிவானி கல்விக் குழுமப் பதிவாளர் ஆர். ராஜேந்திரன் .

குழந்தைகளை முழு அறிவு பெற்றவர்களாக மாற்றுவது ஒன்றுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் திருச்சி ஷிவானி கல்விக் குழுமப் பதிவாளர் ஆர். ராஜேந்திரன் .
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை கிராமத்தில் புதன்கிழமை ஈஸ்ட் கோஸ்ட் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியைத் தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:
கல்வியில் உயர்ந்த நிலை அடைய மொழியறிவு அவசியம். மொழிகளில் சிறந்து விளங்க 4 படிகள் உள்ளன. அவை காதால் கேட்பது - சரளமாகப் பேசுவது - வாசிப்பது - எழுதுவது ஆகும். நம்முடைய குழந்தைகளை நாம் வாழும் பகுதியில் முழு அறிவு பெற்றவர்களாக மாற்றுவது ஒன்றுதான் நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்' என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ். தாஜூதீன் பேசியது:
இக்கல்விக்கூடம் வியாபார நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் உலகத்தரத்தில் தரமான கல்விப் பயின்று, எதிர்காலத்தில் உயர்ந்த பணிகளில் சேர்ந்து நாட்டிற்கும், சமூகத்திற்கும் பயன் தரக்கூடியவர்களாக மாற வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதிரை இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி வாழ்த்திப் பேசுகையில், இக்கல்வி நிறுவனம், சிறந்த சமூகத்தினரை உருவாக்கும் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கும் என்றார்.
தொடக்கத்தில் பள்ளி அரபி ஆசிரியர் மவ்லவி சிராஜூதீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பள்ளி இயக்குநர் டி.வி. ரேவதி வரவேற்றார். பள்ளி முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.
அதிரை கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகப் பொருளாளர் முஹமது இப்ராஹிம், பள்ளி முதல்வர் மீனாகுமாரி, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்- ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com