பாபநாசத்தில் மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருப்பாலைத்துறையில் புதிதாகத் திறக்கப்பட்ட அரசு மதுக்கடையை மூட வேண்டியும், புதிய மதுக்கடை திறக்கக் கூடாது என

திருப்பாலைத்துறையில் புதிதாகத் திறக்கப்பட்ட அரசு மதுக்கடையை மூட வேண்டியும், புதிய மதுக்கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பாலைத்துறையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு மதுக்கடை திறப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அப்பகுதி கிராம வாசிகள் சார்பில் புதிய மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தும் ஜூன் 27 -ம் தேதி அப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது.
இதை கண்டித்து திருப்பாலைத்துறை எஸ்.பி.,ஜி. மிஷன் தெரு,காளியம்மன் கோவில் தெரு, வடக்கு குடியானத் தெரு, கீழகுடியானத் தெரு,மேல குடியானத்தெரு, சன்னதி ரஸ்தா,சுண்ணாம்புகாரத் தெரு, முதலியார் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றின் கரையில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும்.
இக்கிராமத்தில் எந்த இடத்திலும் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்களிடம் பாபநாசம் வட்டாட்சியர் க. ராணி,காவல் ஆய்வாளர் முருகேசன்,வருவாய் அதிகாரி பிராங்க்ளின் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதிய மதுக்கடையை தாற்காலிகமாக மூடுவது, மேலதிகாரிகளை கலந்தாலோசித்து மேல் நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com