சாரங்கபாணி கோயிலில் விடையாற்றி விழா

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழாவின் விடையாற்றி விழாவையொட்டி, புதன்கிழமை இரவு மூன்று புஷ்ப பல்லக்கில் பெருமாள்கள் வீதியுலா நடைபெற்றது.

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழாவின் விடையாற்றி விழாவையொட்டி, புதன்கிழமை இரவு மூன்று புஷ்ப பல்லக்கில் பெருமாள்கள் வீதியுலா நடைபெற்றது.
108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தாற்போல் சிறந்த தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில், சித்திரைப் பெருவிழா மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதன்கிழமை வரை (மே 17) நடைபெற்ற விழாவில் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் விடையாற்றி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அன்று இரவு சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, சக்கரவர்த்தி திருமகன் (ஸ்ரீராமர்) ஆகியோர் மூன்று புஷ்ப பல்லக்கில் தனித்தனியாக எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை ஒருசேர வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் மதியழகன், நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோயில் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com