பூண்டி கல்லூரியில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி நிறைவு

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கும் பயிற்சி திட்டத்தின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கும் பயிற்சி திட்டத்தின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாம் மே 4-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார்.
இந்த முகாமில் பங்கேற்ற தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 80 மாணவ, மாணவிகளுக்கு இயற்கை மருத்துவர் கோ. சித்தர் சான்றிதழ் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ப. சோழன், கல்லூரி அறிவியல் புலத் தலைவர் வி.எஸ். நாகரத்தினம், மேலாண்மை இயக்குநர் ஆர். சுவாமிநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. கோமகன், துணை ஒருங்கிணைப்பாளர் ஜி. மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com