டெங்கு கொசுப் புழு: பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு அபராதம்

டெங்கு கொசுப் புழு உற்பத்திக்குக் காரணமாக இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ரூ. 5,000 அபராதம் விதித்தார்.

டெங்கு கொசுப் புழு உற்பத்திக்குக் காரணமாக இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ரூ. 5,000 அபராதம் விதித்தார்.
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், மணக்கரம்பை, அய்யம்பேட்டை, பசுபதிகோயில் ஆகிய இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தொல்காப்பியர் சதுக்கம் அருகேயுள்ள டீ கடையில் ஆய்வு செய்த ஆட்சியர், அங்கிருந்த இரும்பு சட்டியில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தார். அதை உடனடியாக அழிக்க ஆட்சியர் உத்தரவிட்டதுடன், டீ கடை உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதித்தார்.
பின்னர், நாகை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், வாகனப் பணிமனையில் பழைய டயர் மற்றும் தேவையற்ற பழைய பிளாஸ்டிக் பாய்களில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பதைக் கண்டறிந்து அழித்தார். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பெட்ரோல் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கோட்டாட்சியர் சி. சுரேசிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
வட்டாட்சியர் ஆர். தங்கபிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com