பேராவூரணியில் கருத்தரங்கம்
By DIN | Published on : 14th November 2017 07:59 AM | அ+அ அ- |
பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
வான் சிறப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திருக்குறள் பேரவையின் தலைவர் மு.தங்கவேலனார் தலைமை வகித்தார். கருத்தாளர்களாக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தா.கலைச்செல்வன் ஆகியோர் வான் சிறப்பு அதிகாரத்தின் நோக்கங்களை வலியுறுத்தி பேசினர். பேரவையின் நிர்வாகக்குழு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரவைச் செயலாளர் பேரா. கி.புவனேசுவரி வரவேற்றார். பேரவை உறுப்பினர் ஆயர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.