அதிரையில் டிச.6-இல் பாபர் மசூதி இடிப்பு தின ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேட்டி

தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் பாபர் மசூதி  இடிப்பு தினமான டிச.6-ம் தேதி  அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான த

தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் பாபர் மசூதி  இடிப்பு தினமான டிச.6-ம் தேதி  அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு அதிராம்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  கட்சியின் நிர்வாக வசதிக்காக தஞ்சை மாவட்டத்தை தஞ்சை மாநகர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு என 3 மாவட்டங்களாகப் பிரித்துள்ளோம்.  
பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6-ம் தேதி அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக  கலந்து கொள்ள வேண்டும்.
இப்பகுதி மக்கள் எங்களிடம் தெரிவிக்கும் கோரிக்கைகளை  பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகரிடம் எடுத்துக் கூறி, அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிரை பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மனிதநேய ஜனநாயகக் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார்.
பேட்டியின்போது,  கட்சியின் மாநில துணை பொதுச்செயலர்  மதுக்கூர் கே. ராவுத்தர்ஷா,  மாநிலச் செயலர்
நாச்சிக்குளம் தாஜூதீன்,  மனிதநேய கலாசாரப் பேரவையின் குவைத் மண்டல துணைச் செயலர் அதிரை ஏ.எச். பைசல் அகமது, அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com