ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

அதிராம்பட்டினத்தில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினத்தில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பறவையியல் அறிஞர் டாக்டர் சலீம் அலி பிறந்த நாளை முன்னிட்டு பறவைகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
இதில், அதிரை இமாம் ஷாபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  நடுத்தெரு, மேலத்தெரு, கரையூர் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், ஏ.எல்.மெட்ரிக். பள்ளி ஆகிய 8 பள்ளிகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மொத்தம் 329 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  
இவர்களில் ஒரு பள்ளிக்கு, முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் என்ற அடிப்படையில், 8 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 24 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். அதிரை ஈஸ்ட் கோஸ்ட் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி இயக்குநர் டி.வி.ரேவதி, மாவட்ட வன அலுவலர் (ஓய்வு) மு. அன்பழகன் ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com