சமூக பங்களிப்பில் சிறந்த நிறுவனம்: இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துக்கு விருது

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத்தின் 13-வது உயர்கல்வி மாநாட்டில் தஞ்சாவூரில் உள்ள இந்திய

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத்தின் 13-வது உயர்கல்வி மாநாட்டில் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துக்குச் சமூகப் பங்களிப்பில் சிறந்து விளங்கிய நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டது.
இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத் தலைவர் அனில் சகசர்புதே வழங்கிய இந்த விருதை இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தது:
சிறிய வெங்காய விவசாயிகளின் பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதற்காகப் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் தமிழக அரசுடன் இணைந்து தொடங்கப்பட்ட பொது உணவு பதப்படுத்துதல் மையத்துக்காகவும், அதன் செயல்பாட்டுக்காகவும் இவ்விருது கிடைத்துள்ளது.
இந்தப் பொது உணவு பதப்படுத்துதல் மையம் அறுவடைக்கு பின் சார்ந்த இழப்பீடுகளை குறைக்க வழிவகைகள் ஏற்படுத்தியும், பதப்படுத்துதல் சார்ந்த தொழில்நுட்பங்களை வழங்கியும் உதவி புரிந்து வருகிறது. மேலும், கிராமப்புற மகளிரின் வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டும், இந்நிறுவனம் சிறிய வெங்காயத் தாள் மற்றும் வேர் அறுக்கும் இயந்திரங்களையும் வடிவமைத்து வழங்கியுள்ளது.
மேலும், இத்திட்டம் வெற்றி பெறுவதற்கு இடைவிடாது பணிபுரிந்த கழக ஊழியர்கள், உதவி புரிந்த மத்திய உணவு தொழில்கள் அமைச்சகம் மற்றும் மாநில அரசு மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதைப் பெறுவதற்கு நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் விண்ணப்பித்ததாகவும், அவற்றில் நான்கு நிறுவனங்கள் இப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, இக்கழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com