காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா
By DIN | Published on : 15th November 2017 05:41 AM | அ+அ அ- |
தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள நேரு சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராசன், பொருளாளர் ஆர். பழனியப்பன், கோட்டத் தலைவர் வெங்கடேசன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி காலித் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவர் டி. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோ. அன்பரசன், வட்டாரத் தலைவர் செல்வராஜ், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கண்டிதம்பட்டு ஆர். கோவிந்தராஜ், பி. ராம்பிரசாத், ஐ.என்.டி.யு.சி. மாநிலச் செயலர் மோகன்ராஜ், ஆட்டோ தொழில் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில்... தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் லோகநாதன் தலைமை வகித்து , நாட்டின் முதல் பிரதமரான நேருவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தினார்.
விழாவில் வட்டார தலைவர் பாலதண்டாயுதம், மாவட்ட துணை தலைவர் சிவசங்கர், வட்டாரத் தலைவர் நாராயணசாமி, நகர தலைவர் மிர்சாவூதீன், நகர செயலாளர் சரவணன், பொது குழு உறுப்பினர் செந்தில்நாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.