"30 வயதுக்கு மேற்பட்டோர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது அவசியம்'

முப்பது வயதுக்கு மேற்பட்டோர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது அவசியம் என்று  கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

முப்பது வயதுக்கு மேற்பட்டோர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது அவசியம் என்று  கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தலைமை மருத்துவர் ஜஸ்டின் பிரசாந்த் தலைமை வகித்தார். மருத்துவர்கள் செல்வி, பிரசன்னா முன்னிலை வகித்தனர். தேசிய சுகாதார குழுமத்தின் தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலரும்,  சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு நிபுணருமான எம்.எட்வின்  பேசியது:
 30 வயதுக்கு மேற்பட்டோர் தவறாமல் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள் வேண்டும். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி சர்க்கரை நோய்,  ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை  இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், தரமான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. எனவே,  அலட்சியம் காட்டாமல் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்பு, பாதங்கள் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து நோயாளிகள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.  உடற்பயிற்சி,  நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவர் ஆலோசனையின்படி மாத்திரை, இன்சுலின் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயை கட்டுக்குள் வைத்து இயல்பாக வாழலாம் என்றார்.
கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவப் பரிசோதனை செய்து, தேவைப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
 ஏற்பாடுகளை தொற்றாநோய் பிரிவு செவிலியர்கள் சத்யா, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து செருவாவிடுதி, குறிச்சி, காலகம், பின்னவாசல், அழகியநாயகிபுரம், ஊமத்தநாடு, பெருமகளூர் ஆகிய இடங்களில் தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் எம்.எட்வின் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com