பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதி அரசுப் பள்ளிகளில் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதி அரசுப் பள்ளிகளில் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வென்றவர்களுக்கு தலைமையாசிரியர் மாலதி தலைமையில் பரிசு வழங்கப்பட்டது.
பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், யானை ஓட்டம், நொண்டி போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியை வீரம்மாள் தொடக்கி வைத்தார். ஆசிரியைகள் ஜெயந்தி, ரஞ்சிதா, குளோரி ஆகியோர் நடுவர்களாக இருந்து விளையாட்டு போட்டிகளை நடத்தினர். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் செய்திருந்தார்.
கும்பகோணம் பள்ளிகளில்... இதே போல்,  கும்பகோணம் அல்அமீன்மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நேரு பிறந்த நாள் விழாவில் ஏராளமான மாணவர்கள் நேருவை போல் வேடமணிந்து வந்திருந்தனர். விழாவுக்கு பள்ளி தலைவர் முகமதுஇக்பால் தலைமை வகித்தார். முதல்வர் சையத்அப்துல்சுபஹான் வரவேற்றார்.கல்வி ஆலோசகர்கள் செளந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி , மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்     பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், கார்த்திக் வித்யாலயா பன்னாட்டுப் பள்ளியும் இணைந்து குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர்.  விழாவில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஜவாஹர்லால் நேரு போன்று மாறுவேடமணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, கோலப்போட்டி. மாறுவேடப்போட்டி,  ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இவ்விரு பள்ளிகளின் தாளாளர்களான கார்த்திகேயன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். மேலும் இருபள்ளி தலைமையாசிரியர்களான அம்பிகாபதி, சாந்தி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அலிவலத்தில்...  அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் எல்.கோவிந்தராசு தலைமை வகித்தார்.  பள்ளியின் அறங்காவலர் ஆர்.லெட்சுமணன், பள்ளியின் தாளாளர் சித்ரா கோவிந்தராசு ,  பள்ளியின் முதல்வர் சி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாரதிகுகன் வரவேற்றார்.
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு,  வென்றவர்களுக்கு நேரு வேடம் அணிந்து வந்த மாணவர்க கையால் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதுக்கூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தண்டாயுதபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  நிறைவில், பள்ளியின் துணை முதல்வர் கதிரவன் நன்றி கூறினார்.
ஏஆர்ஆர் பள்ளியில்... கும்பகோணம் ஏஆர்ஆர்எஸ் எல்வித்யாஸரம் (சி.பி.எஸ்.இ) பள்ளியில் குழந்தைகள் தினம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ்ராமன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நரசிம்மன் வரவேற்றார்.  இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ஆர் குழும பள்ளிகளின் தாளாளர் கே.எஸ்.சுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஏ.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் காயத்ரி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். பின்னர் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் கல்வி மேற்பார்வையாளர் சிந்தாமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com