பாபநாசம் அரசுப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்நூற்றாண்டு விழாவையொட்டி பாபநாசம் வட்டத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கிடையே வரும்   வியாழக்கிழமை கபடி, கையுந்துப் பந்து போட்டி உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ளன.
இதையொட்டி, அங்கு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர் ஆ. அண்ணாதுரை,  விளையாட்டுத் திடலின் சுற்றுச்சுவரை சீர் செய்து வண்ணம் பூசவும்,  திடலில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அழித்து,  மணல் நிரப்பி சமப்படுத்தவும், விளையாட்டுத் திடலில் பொது சுகாதாரப் பணிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் முறையாக மேற்கொள்ளவும்,  மின் விளக்கு, மின்சார வசதி  உள்ளிட்ட வசதிகளை செய்து, திடலை முறையாக வைத்திருக்க வேண்டும் என பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் நா.மனோகரன்,பள்ளி தலைமை ஆசிரியர் வி.மணியரசன் உள்ளிட்டோரிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது,  மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் பாபு, மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், வட்டாட்சியர் வெங்கடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பழனிவேல், வருவாய் அதிகாரி பிராங்ளின், பள்ளி உடற் கல்வி ஆசிரியர் டி.செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com