2023-இல் வெள்ளி கோளுக்குச் செல்லத் திட்டம்

வருகிற 2023 ஆம் ஆண்டில் வெள்ளிக் (வீனஸ்) கோளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் திரவ

வருகிற 2023 ஆம் ஆண்டில் வெள்ளிக் (வீனஸ்) கோளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் திரவ உந்துகை வளாக (மகேந்திரகிரி) இயக்குநர் எஸ். பாண்டியன்.
தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: இந்திய விண்வெளி ஆய்வு மையம் சந்திரயான் - 2 திட்டத்தை அடுத்தாண்டு செயல்படுத்தவுள்ளது.  மேலும், 2023 ஆம் ஆண்டில் வெள்ளிக் கோளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வளவு டிரான்ஸ்பான்டர்கள், தொலைக்காட்சி சேனல்கள் இருந்தும் இன்னும் மக்களின் தேவை அதிகமாக உள்ளது. எனவே, இன்னும் கூடுதலாகச் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இதுவரை சில செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டன. இனிமேல் நம் நாட்டிலேயே 4 டன்கள் எடையுடைய செயற்கைக்கோள்கள் நம்முடைய ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. எனவே, வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் நிலை இனிமேல் இருக்காது. நம் நாட்டின் தேவையை உணர்ந்து செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் செயற்கைக் கோள்கள் உருவாக்கப்படுகின்றன. இதில், செயற்கைக் கோள்கள் உருவாக்கத்தில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்கிறோம். இதுவரை அண்ணாமலை பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் 9 மாணவர்களால் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சாதனைகள் என்றார் பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com