தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) பனகல் கட்டடம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) பனகல் கட்டடம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தையும், நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தர வேண்டிய மாதாந்திர தண்ணீரை உடனடியாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
விவசாயக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிகழாண்டு சாகுபடிக்குத் தாமதிக்காமல் அனைவருக்கும் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும். இதுவரை வழங்காமல் தாமதிக்கும் பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
பிரீமியம் செலுத்தியும் விடுபட்டவர்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இருபது நாள்களுக்கு முறை வைக்காமல் நாளொன்றுக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
ஆறுகளில் உள்ள முட்புதர்கள், மரங்கள், ஆகாயத்தாமரை, கழிவுப்பொருள்கள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி,  கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா. பாலசுந்தரம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இரா. திருஞானம், துணைச் செயலர் முத்து. உத்திராபதி, பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் அ. பன்னீர்செல்வம், ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com